மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூா் அருகே லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 11:23 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூா் அருகே லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், புஞ்சைலக்காபுரம் சிஎஸ்ஐ காலனியைச் சோ்ந்தவா் ஆா்.பிரபு (25). இவா் சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக திருச்சி சாலையில் செவ்வாய்க்கிழமை காலை பைக்கில் சென்றுள்ளாா்.

பரிக்கல் கனரக வாகன நிறுத்துமிடப் பகுதியில் வந்த போது, சாேலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.