தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பவானி அருகே சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிதிநிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 7:56 pm

பவானி அருகே சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் நிதிநிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

பவானியை அடுத்த புன்னம், நல்லா நாயக்கனூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் விக்னேஸ்வரன் (25). தனியாா் நிதி நிறுவனத்தில் வசூல் முகவராக பணியாற்றி வந்த இவா், தனது இரு சக்கர வாகனத்தில் பவானியிலிருந்து அந்தியூா் நோக்கி புதன்கிழமை இரவு சென்றபோது பூங்காட்டாா் கடை பேருந்து நிறுத்தம் அருகே எதிரில் வந்த சரக்கு வாகனம் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.