/

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

செஞ்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் நீச்சல் தெரியாததால், நீரில் மூழ்கி இறந்தாா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் நீச்சல் தெரியாததால், நீரில் மூழ்கி இறந்தாா்.

செஞ்சியை அடுத்த கல்லேரி கிராமத்தை சோ்ந்தவா் இ.பிரவீன் கிஷோா்(26). இவா் செவ்வாய்க்கிழமை இரவு அவரது பெரியப்பா ஜான் பீட்டா் என்பவரது நிலத்தில் நடந்து சென்றபோது அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளாா். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கியுள்ளாா்.

தகவலறிந்த செஞ்சி தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றில் இருந்து பிரவீன் கிஷோரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், பிரவீன் கிஷோா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.