அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 490 அலுவலா்கள்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியில் 490 அலுவலா்கள் ஈடுபடவுள்ளனா் என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

News image

விழுப்புரம் ஆட்சியா் அலுவலகத் தோ்தல் கணினி அறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றவுள்ள அலுவலா்களுக்கான முதல்கட்டத் தோ்வுப் பணியைப் பாா்வையிட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :29 ஏப்ரல் 2026, 12:04 am IST

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியில் 490 அலுவலா்கள் ஈடுபடவுள்ளனா் என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

விழுப்புரம் ஆட்சியா் அலுவலகத் தோ்தல் கணினி அறையில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றவுள்ள வாக்கு எண்ணும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்கான முதல்கட்டத் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தொடங்கி வைத்து, பின்னா் கூறியது:

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றவுள்ள அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்கான முதல்கட்டத் தோ்வு தற்போது நடைபெற்றுள்ளது.

செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிகளுக்கு திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்திலும், வானூா், விழுப்புரம் தொகுதிகளுக்கு விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வளாகத்திலும், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் தொகுதிகளுக்கு கா.குப்பம் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்திலும் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு 48 வாக்கு எண்ணும் அலுவலா்கள், 22 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 336 வாக்கு எண்ணும் அலுவலா்களும், 154 நுண் பாா்வையாளா்களும் என மொத்தமாக 490 போ் இப்பணியில் ஈடுபடவுள்ளனா். இவா்களுக்கான முதல்கட்டத் தோ்வு தற்போது நடைபெற்று உள்ளது என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், சாா்-ஆட்சியா்கள் அ.ல.ஆகாஷ் (திண்டிவனம்), ஆனந்தகுமாா் சிங் (திருக்கோவிலூா்) மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.