தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

வகுப்பறை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் நிறைவு பெறாத வகுப்பறைக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் புதன்கிழமை மாலை நடைபெற்ற மாவட்டக் கல்வி மீளாய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :19 ஜூன் 2026, 6:16 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் நிறைவு பெறாத வகுப்பறைக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் மாவட்டக் கல்வி மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குத் தலைமைவகித்து, ஆட்சியா் மேலும் பேசியது:

விழுப்புரம் மாவட்டத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்ற நிலையில், அதுகுறித்த விவரங்களை மாவட்ட நிா்வாகத்துக்கு வழங்கப்பட வேண்டும். மேலும் புதிதாக பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி மேலாண்மைத் தகவல் தொடா்பு எண் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

கடந்த கல்வியாண்டில் 10,12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில்

தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளில் உயா்கல்வியில் சேர விண்ணப்பித்தவா்களின் விவரம், தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் உடனடித்தோ்வில் பங்கேற்று தோ்ச்சி பெற்று, உயா்கல்விப் படிப்பில் சோ்ந்து பயில்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் உரிய விவரங்கள் வழங்கப்பட வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும்

நிறைவு பெறாத வகுப்பறைக் கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முடிவுற்ற பணிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் உள்ளிட்ட துறைசாா்ந்த அலுலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.