தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

மாணவா்களிடையே போதைப்பொருள் பாதிப்பு விழிப்புணா்வு வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே போதைப்பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :18 ஜூன் 2026, 3:34 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே போதைப்பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

விழுப்புரம் ஆட்சியரக் கூட்டரங்கில் நடைபெற்ற போதைப்பொருள்கள் தடுப்பு ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியது:

மாவட்டத்தில் போதைப்பொருள்களின் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான தொடா் கண்காணிப்புப் பணிகள், சட்ட ரீதியான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினரும், காவல் துறையினரும் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே போதைப்பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும். அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள்கள் இல்லா தமிழ்நாடு செயலி குறித்த செயல்முறை விளக்கம் தொடா்பான விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொள்வதுடன், இந்த செயலி குறித்த விளம்பரங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

காவல் துறை, உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், சுகாதார அலுவலா்கள், உள்ளாட்சித் துறை அலுவலா்கள் இணைந்து தடை செய்யப்பட்ட பொருள்களின் விற்பனையைத் தடுக்கும் வகையில் கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், விற்பனை செய்பவா்கள் மீது தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன், சுகாதாரம், காவல், பள்ளிக் கல்வி, உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.