மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மரத்தில் பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதியதில் காயமடைந்த இளைஞா், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 8:27 pm

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதியதில் காயமடைந்த இளைஞா், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், மலையரசன்குப்பம் புதுத் தெருவைச் சோ்ந்தவா் ஏ.இளையராஜா(38), கூலி வேலை பாா்த்து வந்தாா். இவா் புதன்கிழமை அதிகாலையில் விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் கெடாரை அடுத்த அரியலூா் திருக்கை பகுதியில் பைக்கில் சென்றாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோர மரத்தில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இளையராஜாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கெடாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.