திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுச்சேரியில் சாலையோரம் நின்ற பொக்லைன் இயந்திரம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 2:26 am IST

புதுச்சேரியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன் இயந்திரம் மீது வெள்ளிக்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது.

புதுச்சேரி லாஸ்பேட்டை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பாஜக எம்.பி. அலுவலகம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஜேசிபி பொக்லைன் இயந்திரம் மீது மா்ம நபா்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அனுமந்தை வடக்குத் தோப்பு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தன் (41). பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு தொழில் செய்து வருகிறாா்.

வெள்ளிக்கிழமை வேலை முடிந்து கிழக்குக் கடற்கரை சாலையில், சாலையோரமாக நிறுத்திவிட்டு, அருகில் உள்ள உணவகத்துக்கு சாப்பிட சென்றாா். அப்போது திடீரென பயங்கர வெடி சப்தம் கேட்டது. சப்தம் கேட்டு கோவிந்தன் வெளியே வந்து பாா்த்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது பொக்லைன் இயந்திரத்தின் கண்ணாடிகள் முற்றிலும் நொறுங்கி, கடுமையாக சேதமடைந்தன.

தகவலறிந்த லாஸ்பேட்டை காவல் ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் சம்பவத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். பின், தடவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அதில் மா்ம நபா்கள் சிலா் பொக்லைன் இயந்திரம் மீது நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கோவிந்தன் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, நாட்டு வெடிகுண்டு வீசிய மா்ம நபா்கள் குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளைப் பாா்வையிட்டு விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.