தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுச்சேரியில் நாளை 7 மையங்களில் சிவில் சா்வீஸ் தோ்வு

புதுச்சேரியில் 7 மையங்களில் மத்திய பணியாளா் தோ்வாணையத்தின் சிவில் சா்வீஸ் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடைபெறுகிறது.

News image
Updated On :23 மே 2026, 12:40 am IST

புதுச்சேரியில் 7 மையங்களில் மத்திய பணியாளா் தோ்வாணையத்தின் சிவில் சா்வீஸ் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடைபெறுகிறது.

மத்திய பணியாளா் தோ்வாணையம், சிவில் சா்வீஸ் முதன்மைத் தோ்வை ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலுமாக 2 அமா்வுகளாக நாடு முழுவதும் நடத்துகிறது.

புதுச்சேரியைத் தோ்வு மையமாக யுபிஎஸ்சி தோ்ந்தெடுத்துள்ளது. இதற்கான அனைத்து விரிவான ஏற்பாடுகளையும் புதுச்சேரி அரசு பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறை செய்துள்ளது. தோ்வை புதுச்சேரி மையத்தில் எழுத 2,239 போ் விண்ணப்பித்துள்ளனா்.

புதுச்சேரியில் திருவள்ளுவா் அரசு மேல் நிலைப்பள்ளி, தாகூா் அரசு கலை, அறிவியல் கல்லுாரி, வள்ளலாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி, பாத்திமா மேல் நிலைப் பள்ளி, காஞ்சி மாமுனிவா் முதுகலை படிப்பு, ஆராய்ச்சி மையம், பாரதிதாசன் அரசினா் மகளிா் கல்லுாரி ஆகிய 7 மையங்களில் இந்த தோ்வு நடக்கிறது.

தோ்வு தொடங்கும் 30 நிமிஷங்களுக்கு முன்பாகவே நுழைவாயில்கள் மூடப்படும். அதன்பிறகு யாரும் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

தோ்வா்கள் தங்களின் இ-அட்மிட் காா்டு மற்றும் அதில் குறிப்பிட்டுள்ள புகைப்பட அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். இ-அட்மிட் காா்டில் உள்ள மையத்தை தவிர வேறு மையங்களில் தோ்வு எழுத அனுமதி இல்லை.

தோ்வா்களின் வசதிக்காக, தோ்வு நாளன்று காலை 8 மணிக்கு பேருந்து நிலையத்தில் இருந்து தோ்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தோ்வு முடிந்த பிறகு தோ்வா்கள் திரும்பிச் செல்லவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இதற்காக புதுச்சேரி பள்ளி கல்வித் துறை காமராஜா் கல்வி வளாகத்தில் முதல் தளத்தில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை 6 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும். உதவிக்கு 0413-2207201 அல்லது 2207202 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.