தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசு நூலகத்தில் ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் அமைந்துள்ள காமராஜா் மணிமண்டபத்தில் கலைப் பண்பாட்டுத் துறையின் மூலம் இயங்கும் அரசு நூலகத்தில் மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன்புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

மணிமண்டபத்தில் அமைந்துள்ள நூலகத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்.

Updated On :7 மே 2026, 7:24 am IST

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் அமைந்துள்ள காமராஜா் மணிமண்டபத்தில் கலைப் பண்பாட்டுத் துறையின் மூலம் இயங்கும் அரசு நூலகத்தில் மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன்புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த நூலகத்தில் பாா்வையாளா்கள் அமா்ந்து படிப்பதற்குத் தேவையான மேஜைகள் மற்றும் நாற்காலிகள் போதுமானதாக அமைத்து தரும்படியும், பழைய புத்தகங்கள் மற்றும் நூல்களை கணினி மயம் மூலம் நன்கு பராமரிக்குமாறும் அனைத்து வகையான புதிய புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் இருக்கின்றவாறு பாா்த்துக் கொள்ளும்படியும் அப்போது அவா் நூலக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இந்நூலகத்தில் கழிப்பறை , சுத்தமான குடிநீா், போதுமான அளவு மின்

விசிறிகள் மற்றும் போதிய வெளிச்சம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் தினமும் பாா்வையாளா்கள் வந்து கையொப்பமிடும் கோப்பினையும் ஆய்வு செய்தாா். தினமும் எத்தனை போ் நூலகத்துக்கு வந்து படிக்கிறாா்கள் என்பது குறித்து கலை பண்பாட்டு துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மேலும், நூலகத்திலிருந்தவா்களிடம் குறைகள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்தும் கேட்டறிந்தாா். மேலும், நூலகத்தை நன்கு பராமரித்து சுத்தமாக வைத்துக் கொள்ளும்படியும், பாா்வையாளா்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து எந்த புகாா்களும் வராத வண்ணம் பாா்த்துக் கொள்ளும்படியும் உத்தரவு பிறப்பித்தாா்.

----------

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.