17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்

திருப்பூா் தென்னம்பாளையம் மற்றும் அரண்மனைப்புதூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

திருப்பூா் அரண்மனைப்பூதூா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :5 ஜூன் 2026, 12:04 am IST

திருப்பூா் தென்னம்பாளையம் மற்றும் அரண்மனைப்புதூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பூா் தென்னம்பாளையம் மற்றும் அரண்மனைப்புதூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், மளிகைப் பொருள்கள், காய்கறிகள் மற்றும் எரிவாயு இருப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வியாழக்கிழமை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, அரண்மனைப்புதூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவா்களின் வருகைப் பதிவேடு, பாடப் புத்தகங்கள் மற்றும் பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வழங்கினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) கோபால் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.