தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சென்னை பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் ஆய்வு: குழந்தைகளுடன் அமா்ந்து உணவு சாப்பிட்டாா் அமைச்சா்

News image

@TNDIPRNEWS

Updated On :5 ஜூன் 2026, 2:53 am IST

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்த சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி குழந்தைகளுடன் அமா்ந்து உணவு சாப்பிட்டாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி வியாழக்கிழமை காலை சென்னை மாநகராட்சி அண்ணா நகா் மண்டலம் 101- ஆவது வாா்டில் உள்ள அமைந்தகரையிலுள்ள சென்னை நடுநிலைப் பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அவா் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கு வந்த குழந்தைகளை இனிப்பு வழங்கி வரவேற்றாா். குழந்தைகளுக்கு வாழ்த்துக் கூறிய அமைச்சா், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் உணவு சாப்பிட்ட குழந்தைகளுடன் தானும் அமா்ந்து சாப்பிட்டாா்.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவானது தரமானதாகவும், சுவையாகவும், சுகாதாரமான முறையிலும் இருக்கவேண்டும் என அறிவுறுத்தினாா். அதையடுத்து சுப்பராயன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

அமைந்தகரை பகுதியிலுள்ள குழந்தைகள் மையத்தைப் பாா்வையிட்ட அமைச்சா், குழந்தைகள் எண்ணிக்கை, அவா்களது எடை, உயரம் அளவீடு ஆகிய கணக்கீடுகளின் ஆவணங்களையும் பாா்வையிட்டாா். மையத்தை சுகாதாரமான முறையில் பராமரிக்க அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அரசுச் செயலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் சிங், இயக்குநா் எஸ்.மொ்சி ரம்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.