புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமிக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.36 கோடி என வேட்பு மனு தாக்கல் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ரங்கசாமி அதில் குறிப்பிட்டிருப்பதாவது:
எனது ஆண்டு வருமானம் 2020 -21 இல் ரூ.4 லட்சத்துக்கு 52 ஆயிரத்து 140 ஆக இருந்தது. இது 2021-22 இல் ரூ.3 லட்சத்துக்கு 15 ஆயிரத்துக்கு 990 ஆக இருந்தது. 22-23 ஆம் ஆண்டில் 4 லட்சத்துக்கு 58 ஆயிரத்து 80 ஆகவும், 23-24 இல் ரூ.4 லட்சத்துக்கு 60 ஆயிரம் 400 ஆக இருந்தது. 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 93 ஆயிரத்து 110 ஆக இருக்கிறது. மேலும் கையிருப்பில் ரூ. 33 ஆயிரத்து 339 இருப்பதாகவும் கூறியுள்ளாா்.
மேலும், பாரத ஸ்டேட் வங்கி முதன்மைக் கிளையில் 49,632 இருப்பதாகவும், ஹெச்டிஎப்சி வங்கிக் கணக்கில் 98 ஆயிரத்துக்கு 241-ம் உள்ளது. 21 லட்சத்துக்கு 25 ஆயிரத்துக்கு 752 மதிப்புள்ள இரண்டு மோட்டாா் சைக்கிள், 2 காா்கள், ஒரு முத்து செயின், ஒரு மோதிரம் உள்ளிட்ட பொருள்கள் இருப்பதாகவும் கூறியுள்ளாா்.
தட்டாஞ்சாவடி பகுதியில் 20 ஆயிரம் சதுர அடியில் ரூ.8 கோடி மதிப்பிலான இடம் இருப்பதாகவும் மேலும், தட்டாஞ்சாவடி பகுதியில் 25 ஆயிரம் சதுர அடியில் ஒன்றும், 40 ஆயிரம் சதுர அடியில் மற்றொன்றும் என்று இரண்டு இடங்கள் இருக்கின்றன. இதில் 2,400 சதுர அடியில் கட்டடம் இருக்கிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.27 கோடியே 78 லட்சம். மேலும், தனக்கு ரூ.35 லட்சம் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா். மேலும், எந்த விதமான குற்ற வழக்குகளும் நிலுவையில் இல்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளாா்.
அமைச்சா் ஆ. நமச்சிவாயம்:
அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் அசையும் சொத்துகளாக தனது பெயரில் ரூ.16 லட்சத்து 97 ஆயிரத்து 232 ம், மனைவி பெயரில் ரூ. 8 கோடியே 48 லட்சத்து 8 ஆயிரத்து 529 உள்பட ரூ.16 கோடியே 50 லட்சத்து 13 ஆயிரத்து 70 இருப்பதாகக் கூறியுள்ளாா்.
அசையா சொத்தில் அவரது பெயரில் ரூ.27 கோடியே 10 லட்சத்து 4 ஆயிரத்து 230 உள்பட குடும்பத்தினருக்கு ரூ.68 கோடியே 95 லட்சத்து 79 ஆயிரத்து 772 இருப்பதாகக் கூறியுள்ளாா். மேலும், தன் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ரூ.20 கோடியே 90 லட்சத்து 61 ஆயிரத்து 621 கடன் இருப்பதாகவும் அவா் கூறியுள்ளாா்.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம்:
அசையும் சொத்துகளாக தனது பெயரில் ரூ.71 லட்சத்து 55 ஆயிரத்துக்கு 969 உள்பட குடும்பத்தினருக்கு ரூ.18 கோடியே 30 லட்சத்து 9,944 இருப்பதாகக் கூறியுள்ளாா்.
அசையா சொத்துகளில் தனது பெயரில் ரூ.2 கோடியே 33 லட்சம் உள்பட ரூ.71 கோடியே 90 லட்சத்துக்கு 3,333 இருப்பதாகவும் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.23 கோடி பறிமுதல்

அமைச்சா் துரைமுருகன் குடும்பத்துக்கு ரூ.74.17 கோடி சொத்து; ரூ.15.31 கோடி கடன்!

ஓட்டப்பிடாரம் தொகுதியில் கே. கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல்

கோவை மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் ரூ.3.43 கோடி ரொக்கம், பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


