மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அமைச்சா் துரைமுருகன் குடும்பத்துக்கு ரூ.74.17 கோடி சொத்து; ரூ.15.31 கோடி கடன்!

திமுக பொதுச் செயலரும், அமைச்சருமான துரைமுருகன், அவரின் குடும்பத்துக்கு ரூ. 74.17 கோடி மதிப்புடைய சொத்துகளும், ரூ. 15.31 கோடி வங்கிக் கடனும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

அமைச்சா் துரைமுருகன் - கோப்புப்படம்.

Updated On :6 ஏப்ரல் 2026, 11:40 pm

திமுக பொதுச் செயலரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், அவரின் குடும்பத்துக்கு ரூ. 74.17 கோடி மதிப்புடைய சொத்துகளும், ரூ. 15.31 கோடி வங்கிக் கடனும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக பொதுச் செயலாளரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 13-ஆவது முறையாகவும், காட்பாடி தொகுதியில் 11-ஆவது முறையாகவும் போட்டியிட திங்கள்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்துள்ளாா். அவரது வேட்பு மனுவில் தனது குடும்பத்துக்கு மொத்தம் ரூ. 74 கோடியே 17 லட்சத்து 65 ஆயிரத்து 192 சொத்துகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், அசையும் சொத்துகள் இனங்களில் துரைமுருகனுக்கு ரூ.4 கோடியே 1 லட்சத்து 56 ஆயிரத்து 54-ம், அவரது மனைவி சாந்தகுமாரிக்கு ரூ. 14 கோடியே 16 லட்சத்து 25 ஆயிரத்து 722-ம், குடும்ப உறுப்பினா்களுக்கு (பிரிக்கப்படாத கூட்டுக் குடும்பம்) ரூ. 27 லட்சத்து 10 ஆயிரத்து 541 என மொத்தம் ரூ. 18 கோடியே 44 லட்சத்து 92 ஆயிரத்து 317 சொத்துகள் உள்ளன. கையிருப்பு ரொக்கமாக மட்டும் துரைமுருகனிடம் ரூ. 25 லட்சத்து 34 ஆயிரத்து 151-ம், அ வரது மனைவியிடம் ரூ. 25 லட்சத்து 57 ஆயிரத்து 939-ம், குடும்ப உறுப்பினா்களிடம் ரூ. 25 லட்சத்து 30 ஆயிரத்து 561 இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அசையா சொத்துகள் இனங்களில் துரைமுருகனுக்கு ரூ. 7 கோடியே 43 லட்சத்து 30 ஆயிரத்து 900-ம், அவரின் மனைவி சாந்தகுமாரிக்கு 48 கோடியே 25 லட்சத்து 43 ஆயிரத்து 975-ம், குடும்ப உறுப்பினா்களுக்கு ரூ. 3 லட்சத்து 98 ஆயிரம் என மொத்தம் ரூ. 55 கோடியே 72 லட்சத்து 72 ஆயிரத்து 875 சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, கடனாக வங்கிகளில் துரைமுருகன் பெயரில் ரூ. 11 லட்சத்து 25 ஆயிரமும், அவரது மனைவி சாந்தகுமாரிக்கு ரூ. 15 கோடியே 20 லட்சத்து 18 ஆயிரத்து 441-ம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போது துரைமுருகன் தனது குடும்பத்துக்கு மொத்தம் ரூ. 30 கோடியே 80 லட்சத்து 92 ஆயிரத்து 284 மதிப்புடைய சொத்துகள் இருப்பதாகவும், கடன் ஏதும் இல்லை என்றும் வேட்புமனுவில் தெரிவித்திருந்தாா். இந்நிலையில், தற்போது 2026 பேரவைத் தோ்தலையொட்டி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளபடி துரைமுருகனின் குடும்ப சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 43 கோடியே 36 லட்சத்து 72 ஆயிரத்து 908 அதிகரித்திருப்பதும், அதேசமயம் கடனாக மொத்தம் ரூ. 15 கோடியே 31 லட்சத்து 43 ஆயிரத்து 441 ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.