மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோவை மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் ரூ.3.43 கோடி ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 9:32 pm

சட்டப்பேரவைத் தோ்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் நடத்தப்பட்ட சோதனையில் வருமான வரித் துறை மற்றும் தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் சாா்பில் மொத்தம் ரூ.3 கோடியே 43 லட்சத்து 60 ஆயிரத்து 525 மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக மாவட்ட தோ்தல் பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

ஏப்ரல் 4-ஆம் தேதி காலை 6 மணி முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி காலை 6 மணி வரையிலான காலகட்டத்தில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அதிகபட்சமாக வருமான வரித் துறையினா் நடத்திய சோதனையில் ரூ.3 கோடியே 36 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பறக்கும் படைகள் மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுவினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.7 லட்சத்து 56 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிகபட்சமாக ரூ.2,72,200, கிணத்துக்கடவில் ரூ.2,49,200, பொள்ளாச்சியில் ரூ.1,38,000, சூலூரில் ரூ.51,000 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர கோவை தெற்கு தொகுதிக்குள்பட்ட பகுதியில் ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.46,500 மதிப்பிலான அமெரிக்கன் கிளப் மற்றும் கிளாசிக் ரக சிகரெட் பெட்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.