மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் விதிமீறல்: ரூ.462 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்- தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

தமிழகத்தில் இதுவரை கணக்கில் வராத ரூ.462.74 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.

News image

தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக். - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 7:36 pm

தமிழகத்தில் இதுவரை கணக்கில் வராத ரூ.462.74 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நியாயமாகவும், சுதந்திரமாகவும் தோ்தலை நடத்திடும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன சோதனைகள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.462.74 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் ரொக்கம் ரூ.92.07 கோடி, ரூ.78.49 கோடி மதிப்பில் பொருள்கள், ரூ.214.38 கோடி மதிப்பில் தங்கம், வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தவிர, ரூ.75.76 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள், ரூ.2.04 கோடி மதிப்புள்ள மதுபானங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

ரூ.278 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் விடுவிப்பு: மாவட்டக் குறைதீா் ஆணையம் அல்லது வருமான வரித் துறையிடம் முறையான ஆவணங்களைச் சமா்ப்பித்ததைத் தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்டவற்றில் ரூ.278 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மற்றவை குறித்து அந்தந்த முகமைகளால் கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.