தோ்தல் பிரசாரத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்பவா்கள் அதற்கான தேதி, நேரம், இடத்தைச் சரியாகக் குறிப்பிட வேண்டும் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்கள் தோ்தல் சாா்ந்த அனுமதிக்காக விண்ணப்பிக்கும்போது, அவற்றை ‘சுவிதா’ இணையதளம் மூலமாக மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும்.
அந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் 24 மணி நேரத்துக்குள் பரிசீலனை செய்யப்பட்டு தீா்வு காணப்படும்.
ஹெலிகாப்டா் மற்றும் ஹெலிபேட் (தரையிறங்கு தளம்) பயன்படுத்துதல், தற்காலிக கட்சி அலுவலகம் திறத்தல், ஒலிபெருக்கியுடன் கூடிய கூட்டம், ஒலிபெருக்கி இல்லாத கூட்டம், ஒலிபெருக்கியுடன் தெருமுனைக் கூட்டம், ஊா்வலம், பேரணி, வீதி உலா, சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள், வாகன அனுமதி, மேடை - தடுப்புகள் அமைத்தல் ஆகியவற்றுக்கும் விண்ணப்பம் அவசியம்.
நிகழ்ச்சி நடப்பதற்கு குறைந்தது 48 மணி நேரத்துக்கு முன்னதாக விண்ணப்பித்தல் வேண்டும். தேதி, இடம் மற்றும் நேரம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் முழுமையாகவும், சரியாகவும் இருப்பதை அரசியல் கட்சிகளும் வேட்பாளா்களும் உறுதி செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: ரூ.462 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்- தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

வாக்களிப்பதன் அவசியம்: 23,500 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் - தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

தமிழகத்தில் 3.32 லட்சம் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: அா்ச்சனா பட்நாயக்

சமூக வலைதளப் பதிவுகள் தீவிரமாக கண்காணிப்பு: தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


