தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.23 கோடி பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில், தோ்தல் பறக்கும் படையினரால், இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 23 லட்சத்து 518 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.23 கோடி பறிமுதல்

Updated On :17 ஏப்ரல் 2026, 4:59 pm

தூத்துக்குடி மாவட்டத்தில், தோ்தல் பறக்கும் படையினரால், இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 23 லட்சத்து 518 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்துக்குள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு, காவல்துறை, மதுவிலக்கு காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன்மூலம் வெள்ளிக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,23,00,518 ரொக்கம், ரூ.16,12,162 மதிப்பிலான பொருள்கள், ரூ.5,62,282 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.