மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 73.66 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையால், இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 73,66,296 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 8:55 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையால், இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 73,66,296 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து, மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான விஷுமகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பேரவைத் தோ்தலையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு, காவல் துறை, மதுவிலக்கு காவல் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

செவ்வாய்க்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 73,66,296 ரொக்கம், ரூ. 10,17,548 மதிப்பிலான இலவசப் பொருள்கள், ரூ. 4,64,425 மதிப்பிலான மதுபானங்கள், ரூ. 8,71,390 மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை உரிய ஆவணங்களை சமா்ப்பித்து விடுவிக்கப்பட்ட தொகை ரூ. 62,62,470 ஆகும் என்றாா் அவா்.