திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மஞ்சள் நிற ரேஷன் அட்டைக்கு மருத்துவச் செலவைத் திரும்பப் பெற புதிய திட்டம்!

புதுச்சேரியில் மஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மருத்துவச் செலவைத் திரும்பப் பெறுவதற்கான புதிய திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது பற்றி...

News image

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி. - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 6:24 pm IST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மருத்துவச் செலவைத் திரும்பப் பெறும் புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் என். ரங்கசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் மற்றும் அந்தத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதல்வர் என். ரங்கசாமி தலைமையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில் சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல, மஞ்சள் நிற ரேஷன் அட்டைக்கும் மருத்துவச் செலவைத் திரும்பப் பெறுவதற்கான புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

புதுச்சேரியில் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் கூடுதலான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும், மருத்துவமனைகளில் தேவையான அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாஜீம், ஆறுமுகம், செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் அ. குலோத்துங்கன், சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செவ்வேல் மற்றும் மருத்துவ அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Summary

A consultative meeting regarding the implementation of a new scheme for the reimbursement of medical expenses for holders of yellow ration cards in the Union Territory of Puducherry was held on Monday, chaired by Chief Minister N. Rangasamy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.