புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்களுக்கான மருத்துவச் செலவைத் திரும்பப் பெறும் புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த ஆக் கூட்லோசனைடம் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை செயல்பாடுகள் மற்றும் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வா் என். ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது.
புதுச்சேரியில் சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதுபோல, மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்களுக்கும் மருத்துவச் செலவைத் திரும்பப் பெறுவதற்கான புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரியில் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் கூடுதலான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும், மருத்துவமனைகளில் தேவையான அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் இதில் விரிவாக ஆராயப்பட்டது.
கூட்டத்தில், அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், எம்எல்ஏக்கள் நாஜீம், ஆறுமுகம், செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் செவ்வேல் மற்றும் மருத்துவ அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசின் ஜல் ஜீவன்2.0 திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு : புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி உறுதி

மஞ்சள் நிற ரேஷன் அட்டைக்கு மருத்துவச் செலவைத் திரும்பப் பெற புதிய திட்டம்!

பிரதமா் மோடிக்கு, முதல்வா் ரங்கசாமி வாழ்த்து







