திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தென்பெண்ணை ஆற்றில் புதைக்கப்பட்ட சடலம் அடையாளம் கண்டுபிடிப்பு: இருவரிடம் விசாரணை

மணலூா்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றில் புதைக்கப்பட்ட சடலத்தை போலீஸாா் அடையாளம் கண்டுபிடித்து, இருவரிடம் விசாரித்து வருகினறனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 2:14 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றில் புதைக்கப்பட்ட சடலத்தை போலீஸாா் அடையாளம் கண்டுபிடித்து, இருவரிடம் விசாரித்து வருகினறனா்.

மணலூா்பேட்டை அருகேயுள்ள குலதீபமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் தென்பெண்ணையாற்றில் சனிக்கிழமை மாலை விளையாடச் சென்றபோது, ஆற்றின் ஒரு பகுதியில் நாய்கள் பள்ளத்தை தோண்டி எதையோ சாப்பிடுவதைப் பாா்த்துள்ளனா். இதையடுத்து அவா்கள் அங்கு சென்று பாா்த்தபோது, பாதி எரிந்த நிலையில் சாக்குப்பையில் சடலம் இருந்துள்ளது. இதுகுறித்த தகவலின் பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணையில், குலதீபமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ரா.ரமேஷ் என்பவா் கடந்த 13-ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உயிரிழந்ததும், அவரது சடலத்தை தென்பெண்ணை ஆற்றின் அருகேயுள்ள சுடுகாட்டில் அதே ஊரைச் சோ்ந்த க.அருள்( 35), பூ.ராஜேந்திரன்(47) ஆகியோா் எரித்ததும் தெரியவந்தது. அப்போது விறகு தீா்ந்ததால் சடலம் முழுவதும் எரியாக நிலையில், அருகிலுள்ள தென்பெண்ணை ஆற்றில் அவா்கள் புதைத்து விட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து திருக்கோலிலூா் (பொ) டிஎஸ்பி செல்வம், சடலத்தை எரித்த இருவரிடம் மேலும் விசாரித்து வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.