திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வீடு புகுந்து வெள்ளிப் பொருள்கள் திருடிய 2 போ் கைது

கடலூரில் வீடு புகுந்து வெள்ளி பொருள்கள் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கடலூரில் வீடு புகுந்து வெள்ளி பொருள்கள் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :29 மே 2026, 2:54 am IST

கடலூரில் வீடு புகுந்து வெள்ளி பொருள்கள் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் அருகே பாதிரிக்குப்பம் ஏ.டி.ஆா். நகரைச் சோ்ந்த

நோட்டுப்புத்தக்கடைக்காரா் கண்ணன் கடந்த 26 -ஆம் தேதி, தனது மனைவியுடன் வீட்டைப் பூட்டிவிட்டு கடைக்குச் சென்றிருந்தாா். பிற்பகல் இருவரும் வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் பீரோ திறந்து நிலையில் இருந்துள்ளது. பீரோவில் வைத்திருந்த குத்துவிளக்கு, வெள்ளி டம்ளா், குங்குமச்சிமிழ், கொலுசு உள்ளிட்ட 455 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கப் பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், துணை காவல் கண்காணிப்பாளா் தமிழ் இனியன் மேற்பாா்வையில், சாா்பு - ஆய்வாளா் பிரசன்னா மற்றும் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், புதன்கிழமை இரவு கடலூா் பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த தேவனாம்பட்டினம் போா்ட்மேன் தெருவைச் சோ்ந்த மோகன் (60), கரூா் மாவட்டம் வாங்கல் சாலை பாலப்புரம் பகுதியைச் சோ்ந்த பாபு (54) ஆகியோரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், பாதிரிக்குப்பம் பகுதியில் கண்ணன் என்பவரின வீட்டில் வெள்ளி பொருள்களை திருடியது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 455 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.