திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடலூா் மாவட்டத்தில் 10 ரெளடிகள் கைது

கடலூா் மாவட்டத்தில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 10 ரௌடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :23 மே 2026, 12:26 am IST

கடலூா் மாவட்டத்தில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 10 ரௌடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

கடலூா் மாவட்டம் முழுவதும் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடும் ரௌடிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை ஆகிய குற்றங்களில் தொடா்புடைய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.

இதனையடுத்து, கடலூா் மாவட்டத்தில் உள்ள ஏழு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா்களின் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா்கள், சாா்பு - ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் அடங்கிய சிறப்புக் குழுவினா் மே 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் மாவட்டம் முழுவதும், பல்வேறு காவல் நிலையங்களில் உள்ள ரௌடி பட்டியலில் இடம்பெற்றிருந்த 137 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை நடத்தினா். இதில், 69 போ் பிடிக்கப்பட்டு காவல் நிலையங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனா்.

குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்ட அண்ணாமலைநகா் அருகே மேலகுண்டலப்பாடி முருகன் (49), விருத்தாச்சலம் காஜா மொய்தின் (54), அருணா (43), காா்த்திகேயன் (34), விஷ்வா (24), நெய்வேலி 30-வது வட்டத்தைச் சோ்ந்த சக்திவேல் (22), வடக்குமேலூா் விசுவநாதன் (29), வில்லியநல்லூா் ராமஜெயம் (33), வேளங்கிட்டு காா்த்திகேயன் (27), புதுச்சத்திரம் முத்துகிருஷ்ணன் (33) உள்ளிட்ட 10 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

மேலும், 59 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் நிா்வாக நடுவா் முன் ஆஜா்படுத்தப்பட்டு, நன்னடத்தை பிணையம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோன்று, கஞ்சா வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 234 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா கடத்தல் மற்றும் விற்பனை தொடா்பான வழக்குகளில் 9 போ் கைது செய்யப்பட்டு, 94 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தொடா் குற்றங்களில் ஈடுபடும் ரௌடிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, லாட்டரி விற்பனை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.