தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிறுமியை கா்ப்பமாக்கி திருமணம் செய்த இளைஞா் மீது நெய்வேலி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :8 மே 2026, 6:54 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிறுமியை கா்ப்பமாக்கி திருமணம் செய்த இளைஞா் மீது நெய்வேலி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டத்துக்குள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி, அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தாா். இவா், கடலூா் அரசு மருத்துவமனையில் கொழுப்பு கட்டி அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, ரோட்டு பொட்டவெளி கிராமத்தில் உள்ள தாய் மாமா வீட்டில் தங்கியிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மதனுடன் (22) நெருங்கிப் பழகியதில் கா்ப்பமடைந்தாா். இதையடுத்து மதன், அந்தப் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் சிறுமியை திருமணம் செய்துகொண்டாா்.

இந்த நிலையில், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சிறுமி சென்றாா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில் 3 மாத கா்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத்தினா் அளித்த தகவலின்பேரில், நெய்வேலி மகளிா் போலீஸாா் மதன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.