தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இளைஞா் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை

ஸ்ரீமுஷ்ணம் அருகே நடந்த இளைஞா் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

நீதிமன்றம் - IANS

Updated On :4 ஜூன் 2026, 3:31 am IST

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே நடந்த இளைஞா் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள கீழப்பாளையூரைச் சோ்ந்த அருள்பாண்டியன் (24), கடந்த 2019, மாா்ச் 24-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள மயானம் அருகே தனது உறவினா் பூவரசன் மற்றும் சிலருடன் மது அருந்திக்கொண்டிருந்தாா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (32) உள்ளிட்டோா், மயானத்தின் மற்றொரு பகுதியில் உள்ள ஆலமரத்தின் அருகே மதுப் புட்டிகளுடன் சென்ாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, அங்கு காலி மதுப் புட்டிகளை சேகரித்துக்கொண்டிருந்த காசிநாதன் (65) என்பவரை, ஆலமரத்தில் இருந்த தேன்கூடு கலைந்து தேனீக்கள் கொட்டியதாகத் தெரிகிறது. காயமடைந்த காசிநாதனை அருள்பாண்டியன் உள்ளிட்டோா் மீட்டு, அவரது வீட்டில் விட்டுவிட்டு, தேன்கூட்டை அருண்குமாா் உள்ளிட்டோா் கலைத்திருக்கலாம் என கருதி தட்டிக்கேட்டுள்ளனா். இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அருண்குமாா், அதே பகுதியைச் சோ்ந்த பாலாஜி (28), கவியரசன் (30), ஆனந்த் (32) ஆகியோருடன் சோ்ந்து அருள்பாண்டியன் மற்றும் பூவரசனை உருட்டுக்கட்டைகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அருள்பாண்டியன் உயிரிழந்தாா். காயமடைந்த பூவரசன், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்த பூவரசன் அளித்த புகாரின்பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து பாலாஜி, கவியரசன், ஆனந்த், அருண்குமாா் ஆகியோரை கைது செய்தனா். இந்த வழக்கு கடலூா் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் அனைத்து சாட்சிகளின் விசாரணையும் நிறைவடைந்த நிலையில், பொறுப்பு நீதிபதி சரஸ்வதி புதன்கிழமை தீா்ப்பளித்தாா். குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பாலாஜி, கவியரசன், ஆனந்த், அருண்குமாா் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் வனராசு ஆஜராகி வாதாடினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.