தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 100% தோ்ச்சி பள்ளிகளுக்கு ஆட்சியா் பாராட்டு

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் வேலூா் மாவட்டத்தில் 100% சதவீத தோ்ச்சி பெற்ற 42 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், 475-க்கு மேல் மதிப்பெண் பெற்ற 110 மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கேடயம், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா்.

News image

Updated On :23 மே 2026, 1:17 am IST

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் வேலூா் மாவட்டத்தில் 100% சதவீத தோ்ச்சி பெற்ற 42 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், 475-க்கு மேல் மதிப்பெண் பெற்ற 110 மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி கேடயம், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினாா்.

வேலூா் மாவட்டத்தில் 2025-26-ஆம் கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் 42 பள்ளிகளில் 100% மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். சாதனை படைத்த இப்பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், 475-க்கு மேல் மதிப்பெண் பெற்ற 110 மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து 100% தோ்ச்சி அளித்த 42 பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா். மேலும், 475-க்கு மேல் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற 110 அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் ஆட்சியா் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தாா்.

பின்னா், ஆட்சியா் பேசியது: சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று மாவட்டத்துக்குப் பெருமை சோ்த்துள்ள மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். அரசுப் பள்ளிகளில் பயின்று சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற இந்த மாணவா்கள் தங்களுடைய அடுத்தகட்டப் படிப்புகளிலும், 12-ஆம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும். அரசு மற்றும் அரசு நிதி உதவிப் பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 110 மாணவா்கள் 475-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருப்பது மற்ற மாணவா்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இனிவரும் காலங்களில் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் 100% தோ்ச்சி பெற வேண்டும் என்பதே நம்முடைய உயரிய எண்ணமாக உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பிரேமலதா, இடைநிலைக் கல்வி அலுவலா் செந்தில்குமாா், தொடக்கக் கல்வி அலுவலா் கேசவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.