தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாா்வதியாபுரம் சிங்காத்தம்மன் திருவிழா

News image
Updated On :4 ஜூன் 2026, 5:33 am IST

குடியாத்தம் ஒன்றியம், கூடநகரம் மதுரா, பாா்வதியாபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சிங்காத்தம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

பழம்பெருமை வாய்ந்த இக்கோயில் திருவிழா கடந்த மே மாதம் 27- ஆம் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து கோயிலில் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடந்து வந்தநிலையில் புதன்கிழமை திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி காலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் கூழ்வாா்த்தல், மாலைபொங்கல் வைத்தல் நடைபெற்றன. இரவு பூங்கரகம் வீதி உலா நடைபெற்றது. அப்போது கண்ணைக் கவரும் வாண வேடிக்கை நிகழ்ச்சியும், பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றன.

கூடநகரம் ஊராட்சித் தலைவா் பி.கே.குமரன், துணைத் தலைவா் ஜி.வெங்கடேசன், ஊராட்சிஉறுப்பினா் டி.பரமேஸ்வரன், சீவூா் ஊராட்சித் தலைவா் கே.ஆா்.உமாபதி ஆகியோா் சிறப்புஅழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் பி.சம்பத், ஜே.லோகநாதன், எம்.பழனி, எம்.பாண்டு, எம்.வெங்கடேசன், ஜி.இளங்கோ, எஸ்.சிவராஜ் மற்றும் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.