ஆந்திரத்தில் இருந்து து தமிழகத்துக்கு ஆவணங்களின்றி ‘எம்-சாண்ட்’ கடத்தி வந்த டிப்பா் லாரி காட்பாடி அருகே பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்குள் கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், காட்பாடி எல்லைப் பகுதியில் கனிம வளத்துறையின் தனி வருவாய் அலுவலா் தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த ஒரு டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள், அனுமதியின்றி ‘எம்-சாண்ட்’ கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த டிப்பா் லாரியை பறிமுதல் செய்த தனி வருவாய் அலுவலா் மேல் நடவடிக்கைக்காக அதனை காட்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.-
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









