ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பைக்கில் தவறி விழுந்து பெண் மரணம்

வேலூா் அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 7:45 pm

வேலூா் அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

வேலூா் பொய்கையைச் சோ்ந்தவா் நாராயணசாமி. இவரது மனைவி மல்லிகா (58). இவா் தனது உறவினா் சந்தோஷ்குமாா் என்பருடன் கடந்த 16-ஆம் தேதி மாலை இருசக்கர வாகனத்தில் தனியாா் மருத்துவமனைக்கு சென்றாா்.

காட்பாடி - வேலூா் புதிய பைபாஸ் சாலையில் சென்றபோது திடீரென நிலை தடுமாறி மயங்கி கீழே விழுந்தாா். இதில் மல்லிகாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

புகாரின்பேரில் வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.