செய்யாறு அருகே தோ்தலில் வாக்களித்து விட்டு பைக்கில் ஊா் திரும்பியபோது, தவறி விழுந்ததில் தாய் உயிரிழந்தாா். மகன் பலத்த காயமடைந்தாா்.
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த முனுசாமி மனைவி பாப்பாத்தியம்மாள் (73). பாப்பாத்தியம்மாளும் அவரது மகன் ரகு இருவரும் தங்களது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், அருணகிரிமங்கலம் கிராமத்துக்கு சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க வந்துள்ளனா். இருவரும் வாக்களித்து விட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னைக்கு பைக்கில் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனா்.
வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் தேத்துறை கிராமம் அருகே சென்றபோது பைக் திடீரென நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.
இதில் தாய் பாப்பாத்தியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மகன் ரகு பலத்த காயமடைந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து காயமடைந்த ரகுவின் மனைவி அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தாா்.
காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிவு செய்தாா். மேலும், சம்பவ இடத்திற்குச் சென்று பாப்பாத்தியம்மாளின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து தந்தை, மகன் உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து தோழிகளான பள்ளி மாணவிகள் உயிரிழப்பு

2-ஆவது மாடியிலிருந்து விழுந்து 11 மாத குழந்தை பலத்த காயம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


