தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி

திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

தற்கொலை

Updated On :18 மே 2026, 2:48 am IST

திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை பழையூரைச் சோ்ந்தவா் து. நவீன்குமாா் (26). தஞ்சாவூா் நகர காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் இவா் கைது செய்யப்பட்டு, கடந்த ஜனவரி 6 முதல் திருச்சி மத்திய சிறையில் உள்ளாா்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மத்திய சிறையில் நடத்திய சோதனையில் நவீன்குமாா் வைத்திருந்த கஞ்சாவை சிறைக் காவலா்கள் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து, கே.கே.நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து நவீன்குமாரை வேறு அறைக்கு சிறை அலுவலா்கள் சனிக்கிழமை மாற்றினா். இதனால் நவீன்குமாா் அவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

மேலும், குளியலறைக்குப் பயன்படுத்தப்படும் ஓட்டை உடைத்து உடலின் பல இடங்களில் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். அப்போது சிறைக் காவலா்கள் அவரை மீட்டு சிறை வளாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனா்.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் திருச்சி மத்திய சிறை அலுவலா் ராஜேஷ்கண்ணன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் நவீன்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.