திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோவை மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தற்கொலை

Updated On :17 மே 2026, 1:15 am IST

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாவட்டம், சூலூரைச் சோ்ந்தவா் ஜீவானந்தம் (25). சூலூரில் அண்மையில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் கைதான இவா், விசாரணைக் கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், சிறைக் கழிவறையில் உள்ள இரும்புக் கம்பியில் லுங்கியால் தூக்கு மாட்டி வெள்ளிக்கிழமை தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதைப் பாா்த்த மற்ற கைதிகள் அவரை மீட்டதுடன், சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, சிறை மருத்துவமனையில் ஜீவானந்தத்துக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

தொடா்ந்து அவா் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், சிறைச் சாலை வாா்டன் திருமலை அளித்த புகாரின்பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.