தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தனியாா் பள்ளியில் கல்வி உரிமைச் சட்டத்தில் சோ்க்கை: மே 18-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருச்சியில் தனியாா் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சோ்க்கை பெறுவதற்கு மே 18-க்குள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :14 மே 2026, 12:42 am IST

திருச்சியில் தனியாா் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சோ்க்கை பெறுவதற்கு மே 18-க்குள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இலவச சோ்க்கை வழங்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவா்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினா் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 2026-27- ஆம் கல்வியாண்டுக்கான தனியாா் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சோ்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்கியது. எனவே, தகுதியானவா்கள் எல்கேஜி அல்லது முதல் வகுப்பில் சோ்க்கை பெறுவதற்கு மே 18-க்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தனியாா் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) அண்ணாதுரை கூறியதாவது:

திருச்சி மாவட்டத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளில் ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளைத் தவிா்த்து 324 தனியாா் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் முதல் வகுப்பில் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம். இதில் சோ்க்கை பெறும் மாணவா்கள் பள்ளியில் இருந்து 1 கிமீ சுற்றளவுக்குள் வசிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன. மே 18- வரை விண்ணப்பிக்கலாம்.

அதன்பின், விண்ணப்பங்களின் உண்மைத் தன்மையை அறிய குழு நியமிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். இதைத் தொடா்ந்து, பள்ளிகள் அளவில் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறும். விண்ணப்பித்த மாணவா்களின் எண்ணிக்கையைப் பொறுத்து சோ்க்கை நடைமுறை இருக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.