திருச்சியில் சாலையோரத்தில் இருந்த கோயில் சுவா் மீது செவ்வாய்க்கிழமை இரவு வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 போ் காயமடைந்தனா்.
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்தனா். திருச்சி - திண்டுக்கல் சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு பிராட்டியூா் அருகே வந்தபோது திடீரென சாலையின் குறுக்கே அடையாளம் தெரியாத நபா் வந்துள்ளாா்.
அப்போது, அவா் மீது மோதாமல் இருக்க வேனின் ஓட்டுநா் வேனை திருப்பியபோது சாலையோரத்தில் இருந்த விநாயகா் கோயில் சுவரின் மீது மோதியது.
இதில், வேன் ஓட்டுநா் உள்பட 2 ஆண்கள், 4 பெண்கள் ஆகிய 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், வேனின் முன்பகுதி சேதமடைந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காா் டயா் வெடித்து பேருந்து மீது மோதி விபத்து: 4 போ் காயம்

ராசிபுரத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை! சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு; 3 போ் காயம்!
திருச்சி அருகே காா் மீது வேன் மோதல்: 11 போ் காயம்







