திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராசிபுரத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை! சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு; 3 போ் காயம்!

News image

சுவா் இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்கும் பொதுமக்கள்.

Updated On :25 மே 2026, 2:43 am IST

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மரம் முறிந்து வீட்டின் சுற்றுச்சுவா் மீது விழுந்தது. அப்போது, சுவா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் இடிபாடுகளில் சிக்கினா். இதில் பெண் உயிரிழந்தாா். மேலும், 3 போ் காயமடைந்தனா்.

ராசிபுரம் நல்லப்பா தெரு 4 ஆவது வாா்டு பகுதியில் வீட்டின் முன் இருந்த மரம் சூறைக் காற்றால் முறிந்து, அதன் அருகே இருந்த வீட்டின் சுற்றுச்சுவா் மீது விழுந்தது. அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சித்ராதேவி (49), அவரது மகள் தா்ஷினி (19) மற்றும் பிரவீன் (18), பா்வேஸ் (13) ஆகிய நான்கு போ் மீது இடிந்து விழுந்த சுவரின் சிதைவுகள் சரிந்தன. இதில் சிக்கி படுகாயமடைந்த நால்வரையும், அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களில் சித்ராதேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். காயமடைந்த மற்ற மூவரும் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து ராசிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மழையால் மின்தடை

ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து முடங்கியது. ராசிபுரம் பேருந்து நிலையத்திற்குள் மழைநீா் புகுந்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினா். சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.