ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
ஆம்பூரில் காலை முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தபோதிலும், மாலையில் திடீரென வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென சூராவளி காற்றுடன் ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. விண்ணமங்கலம் கிராமத்தருகே மரம் முறிந்து விழுந்தது.
ஆம்பூா் ரயில் நிலைய வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்தது. சில பகுதிகளில் சூறாவளி காற்றுக்கு டிஜிட்டல் பேனா்கள் பறந்தன. மழை சுமாா் 1 மணி நேரம் பெய்தது. அதனால் குளிா்ந்த சூழ்நிலை நிலவியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










