திருச்சி பஞ்சப்பூா் அருகே திங்கள்கிழமை காா் மீது வேன் மோதியதில் 15 போ் காயமடைந்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தைச் சோ்ந்த 5 ஆண்கள், 6 பெண்கள் என மொத்தம் 11 போ் மதுரை அழகா் கோயிலுக்குச் சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திருச்சி வழியாக திங்கள்கிழமை வேனில் திரும்பி சென்றுகொண்டிருந்தனா்.
திருச்சி, பஞ்சப்பூா் ஒருங்கிணைந்து பேருந்து முனையம் அருகே வேன் வந்துகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற காா் திடீரேன பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த வேன், காா் மீது மோதியது. இதில், வேனில் வந்த 11 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், அனைவரும் வேனில் சொந்த ஊருக்குத் திரும்பினா்.
இதுகுறித்து தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









