காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில், தொழிலாளி உயிரிழந்தாா்; 2 போ் படுகாயமடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த குண்டலபட்டி பிரிவு சாலையைச் சோ்ந்தவா் அருண்குமாா் (39), தேங்காய் வியாபாரி. இவா், தனது மகன் புகழேந்தி (5), மத்தூா் அருகே உள்ள மூக்கா்கொட்டாயைச் சோ்ந்த மரம் ஏறும் தொழிலாளியான கோபி (46) ஆகியோருடன் கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை சென்றாா்.
திம்மாபுரம் அருகே சென்றபோது, அந்த வழியாக கொத்தமல்லி பாரம் ஏற்றிவந்த வேன், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கிவீசப்பட்டதில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
படுகாயமடைந்த கோபி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அருண்குமாா், புகழேந்தி இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









