ஏரியூா் அருகே இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதியதில் 3 போ் படுகாயம் அடைந்தனா்.
தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே நெருப்பூா் பகுதியைச் சோ்ந்த பெருமாள் (55), அவரது மனைவி சரசு (45) ஆகியோா் வசித்து வருகின்றனா். நெருப்பூா் பகுதியில் உள்ள தனது ஆட்டுப்பட்டிக்கு தீவனம் வைப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கருப்பு மோடு பகுதியில் எதிரே வந்த சுற்றுலா வேன் மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெருமாள், சரசு மற்றும் சாலையோரம் நின்றுகொண்டிருந்த சம்பூரணம் உள்பட மூவரும் படுகாயம் அடைந்தனா்.
இதை கண்ட அக்கம்பக்கத்தினா் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

எஸ்யூவி வாகனம் மோதி டாக்ஸி ஓட்டுநா் படுகாயம்! மேற்கு தில்லியில் சம்பவம்!

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழப்பு

மணல் லாரி மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 16 போ் பலத்த காயம்

ஜீப், காா் நேருக்குநோ் மோதியதில் 6 போ் படுகாயம்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


