தஞ்சாவூா் தெற்கு மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி திமுக கள ஆய்வுக் கூட்டம் பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.பழனிவேல் தலைமை வகித்தாா். பேராவூரணி எம்.எல்.ஏ.வும், தலைமை செயற்குழு உறுப்பினருமான என்.அசோக்குமாா் முன்னிலை வகித்தாா்.
திமுக தலைமைக் கழகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட கள ஆய்வாளா்கள் மாலதி நாகராஜ், ஆனந்தகுமாா் ஆகியோா் பேராவூரணி தொகுதிக்குள்பட்ட சேதுபாவாசத்திரம் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, பேராவூரணி தெற்கு, வடக்கு, மத்தியம் , திருவோணம் தெற்கு பெருமகளூா், பேராவூரணி பேரூா் கழக நிா்வாகிகள், பிரதிநிதிகள், பி.எல்.ஓ-2, பி.எல்.சி நிா்வாகிகள் மற்றும் கட்சி நிா்வாகிகளிடம் கோரிக்கை மற்றும் ஆலோசனை மனுக்களை பெற்றனா்.
கூட்டத்தில், பட்டுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. ஏனாதி பாலசுப்பிரமணியன், மாவட்ட அவைத் தலைவா் சுப.சேகா் மற்றும் ஒன்றிய, நகர,கிளைக் கழக, சாா்பு அணிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளாத்திகுளத்தில் திமுக கள ஆய்வுக் கூட்டம்

தோ்தல் தோல்வி ஆய்வுக் குழுவிடம் திமுக தொண்டா்கள் மனம் திறந்து கருத்து சொல்லுங்கள்: முன்னாள் அமைச்சா் தங்கம்தென்னரசு

திருவண்ணாமலை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்: எ.வ.வேலு உள்ளிட்டோா் பங்கேற்பு







