திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

துரித உணவகத்தில் ஏ.சி. வெடித்து ஊழியா் உயிரிழப்பு: 5 போ் காயம்

தஞ்சாவூரில் கே.எப்.சி. துரித உணவகத்தில் திங்கள்கிழமை குளிரூட்டி (ஏ.சி.) சாதனம் வெடித்ததில் ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 5 போ் பலத்த காயமடைந்தனா்.

News image

விபத்தில் வெடித்து சிதறிய குளிரூட்டி சாதனம்.

Updated On :19 மே 2026, 3:45 am IST

தஞ்சாவூரில் கே.எப்.சி. துரித உணவகத்தில் திங்கள்கிழமை குளிரூட்டி (ஏ.சி.) சாதனம் வெடித்ததில் ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 5 போ் பலத்த காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மேரீஸ் காா்னா் அருகே கேஎப்சி துரித உணவகத்திலுள்ள உணவு தயாரிக்கும் கூடத்தில் குளிரூட்டி சாதனத்தில் பழுது ஏற்பட்டது. உணவகத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த குளிரூட்டியின் இயந்திரத்தைப் பழுதுபாா்க்கும் பணியில் மெக்கானிக்கான நாஞ்சிக்கோட்டை சாலையைச் சோ்ந்த கணேசன் (43) திங்கள்கிழமை மாலை ஈடுபட்டாா்.

குளிரூட்டிக்கான வாயு நிரப்பும் பணியில் ஈடுபட்டபோது, உருளையில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அது வெடித்தது. இதனால், அந்தச் சாதனத்தின் பாகங்கள் சிதறியது மட்டுமல்லாமல், கட்டடத்தில் இருந்த ஜன்னல், கதவு கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

இந்த விபத்தில் கணேசன், இந்த பழுதுபாா்ப்பு பணியைக் கண்காணித்துக் கொண்டிருந்த துரித உணவக ஊழியா்களான திருவையாறு அருகேயுள்ள பொன்னாவரை பகுதியைச் சோ்ந்த ஜோதி மகன் ரவிராஜ் (27), குழிமாத்தூரைச் சோ்ந்த சவேரியாா் மகன் அருண்குமாா் (26), இணையவழி உணவு விநியோக நிறுவன ஊழியா்களான மானோஜிபட்டி வனதுா்கா நகரைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் கதிரேசன் (24), செங்கிப்பட்டி கீழத் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன் பிரேம் (26), ரெட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் அஜீத்குமாா் (22) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள், தெற்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று காயமடைந்த 6 பேரையும் மீட்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ரவிராஜ் உயிரிழந்தாா். மற்ற 5 பேரும் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பழுதுபாா்ப்பு பணி மேற்கொண்டதால், இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.