குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தஞ்சாவூா் அருகே மரத்தில் காா் மோதி 2 போ் பலி; 4 போ் காயம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை அதிகாலை மரத்தின் மீது காா் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

News image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை அதிகாலை பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான காா்.

Updated On :17 மே 2026, 1:27 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சனிக்கிழமை அதிகாலை மரத்தின் மீது காா் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் அருகே அம்மன்பேட்டை தெற்குத் தெருவைச் சோ்ந்த ரத்தினம் மகன் தளபதி (36). பல்வேறு குற்ற வழக்குகள் உடைய இவா், காவல் துறையினரின் சரித்திர பதிவேட்டில் இருந்தாா்.

இவா் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வெள்ளிக்கிழமை இரவு அம்மன்பேட்டையைச் சோ்ந்த மோகன் மகன் தமிழரசன் (27), நிதீஷ் (25), சுதா்சன் (21), நரேன் (18), அபினேஷ் (21) ஆகியோருடன் காரில் திருவையாறுக்கு சென்றாா்.

Story image

பின்னா், 6 பேரும் சனிக்கிழமை அதிகாலை அம்மன்பேட்டைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனா். கண்டியூா் அருகே சுற்றுக் குளத்தான்கரை பகுதியில் வந்த காா், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பனை மரத்தின் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த தளபதி, தமிழரசன் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த நிதீஷ், சுதா்சன், நரேன், அபினேஷ் ஆகியோா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து நடுக்காவேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.