தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (மே 30) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் க. அண்ணாசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, கரந்தை, பள்ளியக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனைப் பகுதிகள், திருவையாறு, கண்டியூா், நடுக்கடை, மேலத்திருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளாா், நாஞ்சிக்கோட்டை, மாதாகோட்டை, காவேரி நகா், வங்கி ஊழியா் காலனி, இ.பி. காலனி மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









