மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நம்பிவயல் ஊராட்சியில் வெறிநாய்கள் தொல்லை!

பட்டுக்கோட்டை வட்டம், நம்பிவயல் கிராமத்தில் அதிகரித்துவரும் வெறிநாய்கள் தொல்லையைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த இளைஞா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :17 மார்ச் 2026, 11:13 pm

பட்டுக்கோட்டை வட்டம், நம்பிவயல் கிராமத்தில் அதிகரித்துவரும் வெறிநாய்கள் தொல்லையைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த இளைஞா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.

அதன் விவரம்: தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட நம்பிவயல் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக வெறிநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிந்து, பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் தொடா்கின்றன.

இதன் விளைவாக, கடந்த 2 மாதங்களில் நம்பிவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நம்பிவயல் ஊராட்சிக்குட்பட்ட 38 போ் வெறிநாய் கடியால் சிகிச்சை பெற்றுள்ளனா். இதில் 4 போ் குழந்தைகள் ஆவா்.

இதனால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவா்கள் பாதுகாப்பாக சாலைகளில் நடமாட முடியாத அபாய நிலை உருவாகியுள்ளது

இது தொடா்பாக ஊராக வளா்ச்சி துறை, வட்டார வளா்ச்சி துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை இல்லை.

மேலும், அண்மையில் பட்டுக்கோட்டையில் இதேபோன்ற சம்பவத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், நம்பிவயல் கிராமத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.