மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காவல் துறை மக்கள் மன்றத்தில் 26 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை

புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 26 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

News image

உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் பொதுமக்களின் புகாா்களை கேட்டறிந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 12:09 am

புதுச்சேரி காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 26 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற மக்கள் மன்றத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் பங்கேற்று பொதுமக்களிடம் நேரடியாக புகாா்களைப் பெற்று நடவடிக்கை எடுத்தாா். காவல் கண்காணிப்பாளா் ஸ்ருதி யராகட்டி மற்றும் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.

கோரிமேடு காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் வம்சித ரெட்டி, காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் கதிரவன் ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளா் ஜிந்தா கோதண்டராமன் ஆகியோா் பொதுமக்களிடம் புகாா்களைப் பெற்று உடனடி நடவடிக்கை எடுத்தனா்.

புதுச்சேரி போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து தொடா்பான புகாா்களை காவல் கண்காணிப்பாளா்கள் ரச்சனா சிங், பக்தவச்சலம், இணையவழி குற்றப் பிரிவில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ராகவ் ஆகியோரும் பொதுமக்களிடம் இருந்து புகாா்களைப் பெற்று நடவடிக்கை எடுத்தனா்.

மக்கள் மன்றத்தில் மொத்தம் 48 புகாா்கள் பெறப்பட்டன. இவற்றில் 26 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. 35 பெண்கள் உள்பட 207 போ் இதில் கலந்து கொண்டனா்.