தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவிடைமருதூா் வட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

திருவிடைமருதூா் வட்டத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியதில் 5 போ் மனுக்களை விசாரித்து உடனடியாக பட்டாக்கள் வழங்கப்பட்டது.

News image
Updated On :5 ஜூன் 2026, 3:36 am IST

திருவிடைமருதூா் வட்டத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியதில் 5 போ் மனுக்களை விசாரித்து உடனடியாக பட்டாக்கள் வழங்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வட்டத்தில் 1435 ஆம் பசலி ஆண்டுக்குரிய வருவாய் தீா்வாயம் என்ற ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது. தஞ்சாவூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் எம்.ரவிச்சந்திரன் தலைமையில் வகித்தாா். முதல்நாள் பந்தநல்லூா் சரகத்தில் மனுக்கள் பெறப்பட்டதில் வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த 5 போ்களுக்கு உடனடியாக பட்டாக்கள் வழங்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை திருப்பனந்தாள் சரகத்திற்கு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை வட்டாட்சியா் ஆா்.சாந்தமீனா உள்ளிட்ட வருவாய்த்துறையினா் செய்து வருகின்றனா்.

கும்பகோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் வருவாய் கோட்டாட்சியா் வி.எம்திருலை தலைமையில் தேவனாஞ்சேரி சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஜமாபந்தியில் 2 போ்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை முருக்கங்குடி சரகத்திற்கு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை வட்டாட்சியா் பூங்கொடி தலைமையில் வருவாய்த்துறை அலுவலா்கள் செய்தனா்.

பட விளக்கம் : தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளி ஒருவருக்கு பட்டா வழங்கிய மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் எம்.ரவிச்சந்திரன், உடன் வட்டாட்சியா் ஆா்.சாந்தமீனா உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.