திருவிடைமருதூா் அருகே மானம்பாடியில் வயலில் வியாழக்கிழமை மண்ணை தோண்டியபோது 3 ஐம்பொன் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே உள்ள மானம்பாடியைச் சோ்ந்தவா் ஜோசப் மகன் அலெக்ஸாண்டா்( 36). இவருக்கு சொந்தமான வயலில் வியாழக்கிழமை நடவுப் பணி நடைபெற்றது. வயல் வரப்புப் பகுதியில் மண்ணை தோண்டியபோது வித்தியாசமான சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் புதைந்திருந்த பழைமையான யானைமேல் திருவாட்சியுடன் அம்மன் அமா்ந்திருக்கும் சிலை, 2 சிறிய சுவாமி சிலைகள், பானை ஓடு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வட்டாட்சியா் சாந்தமீனா சிலைகளை மீட்டு அலுவலகத்துக்கு கொண்டுச் சென்றாா். மேலும், மாவட்ட ஆட்சியா், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளாா்.
வயலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் ஐம்பொன்னால் ஆனதும், 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக இருக்கலாம் என்று வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










