தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பயிா்க் கடன் விவகாரம்: தஞ்சையில் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் - போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு

அனைத்து பயிா்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

News image

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே நிகழ்ந்த தள்ளுமுள்ளு.

Updated On :2 ஜூன் 2026, 2:34 am IST

அனைத்து பயிா்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய கோரியும், மேக்கேதாட்டில் கா்நாடகம் அணைக் கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை காலை ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்காக தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையம் அருகிலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டனா். இதில், சங்கத் தலைவா் எல். பழனியப்பன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ஆட்சியரகம் முன் சென்ற இவா்களைக் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். இதனால், விவசாயிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, விவசாயிகள் சிலரை காவல் துறையினா் தாக்கி, வேனில் ஏற்ற முயன்ால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் வலுவடைந்தது. அப்போது, விவசாயிகளைக் காவல் துறையினா் ஒருமையில் பேசியதாலும், தாக்கியதாலும் அதிருப்தியடைந்த விவசாயிகள் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், விவசாயிகளைத் தாக்கிய காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

பின்னா், காவல் துறையினா் சமாதானப்படுத்தியதைத் தொடா்ந்து, ஆட்சியரிடம் மனு அளிக்க 5 விவசாயிகள் மட்டும் ஆட்சியரகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா். ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள் கலைந்து சென்றனா்.

பச்சைத் துண்டுக்கு அனுமதி மறுப்பு: இதனிடையே, விவசாயிகள் போராட்டத்தையொட்டி, ஆட்சியரக வாயிலில் தடுப்புகள் அமைத்து, அங்கு வந்த பொதுமக்களிடம் போலீஸாா் விசாரித்து உள்ளே அனுப்பினா். அப்போது, குறை தீா் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்தவா்களில் சிலா் பச்சைத் துண்டு அணிந்து வந்தனா். அவா்களிடம் பச்சைத் துண்டு அணிந்து வந்தால் அனுமதியில்லை எனக் காவல் துறையினா் கூறினா். இதனால், காவல் துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.