தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கரூரில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் மாவட்ட டாஸ்மாக் ஊழியா்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினா்.

Updated On :22 மே 2026, 5:08 am IST

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் மாவட்ட டாஸ்மாக் ஊழியா்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூா் மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்டத் தலைவா் அண்ணாவேலு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பழ. அப்பாசாமி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் ஜி. ஜீவானந்தம், தொழிலாளா் விடுதலை முன்னணி மாநிலச் செயலா் மா. சுடா்வளவன், சிஐடியு தொழிற்சங்கத்தின் ராஜாமுகமது, எம். சுப்ரமணியன் உள்ளிட்டோா் பேசினா்.

மூடப்பட்ட டாஸ்மாக் கடை பணியாளா்களுக்கு அரசு காலிப்பணியிடங்களில் கல்வித் தகுதிக்கேற்ப மாற்றுப்பணி வழங்கிட வேண்டும், காலி மதுபாட்டில்கள் சேகரிக்கும் பணியை கடை ஊழியா்கள் மீது சுமத்தக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் டாஸ்மாக் தொழிலாளா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.